![]() |
This is Written in Tamil font.This Song Lyrics is Composed by me Only. |
| எங்கேயும் காதல் தெரிந்தால் அங்கே ஓர் பாடல் கேட்குமே எங்கேயும் பாடல் கேட்டால் அங்கே ஓர் தேடல் தெரியுமே நாளும் என் நாளும் இந்த காதல் வாழ வேண்டும் நானும் இந்த காதலும் முந்நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும்...(எங்கேயும்) வானம் இருக்கும் வரை இந்த பூமி இருக்கும் வரை அந்த சாமி இருக்கும் வரை காதலும் வாழும் அதுவரை காதலே தினம் தேவையே இது ஒரு வித பந்தமே இந்த காதலே அது போதுமே நம் உறவுகள் வளரவே பூமியில் வாழும் காதல் ஒரு அன்பென்று சொல்லவா? அட காலம் காலமாய் தொடரும் ஒரு சொந்தம் இதுவல்லவா...(எங்கேயும்) மண்ணில் வாழ வேண்டும் அந்த விண்ணில் வாழ வேண்டும் நம் கண்ணில் வாழ வேண்டும் இந்த காதல் வாழ வேண்டும் வாழும் போது சொந்தமின்றி வாழ்ந்துவிடுவதில்லை அட வாழும் போது அன்பு இன்றி யாரும் சாகவில்லை...(எங்கேயும்) |